செய்திகள்

புரோ கபடி லீக் - ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவுசெய்தது குஜராத்

புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi

லக்னோ:

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூரும், குஜராத்தும் மோதின.

ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் குஜராத் அபாரமாக ஆடியது. அவர்களின் ஆட்டத்துக்கு ஜெய்ப்பூர் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 36 - 25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணிக்கு நான்காவது வெற்றி ஆகும். #ProKabaddi 

SCROLL FOR NEXT