பாயிண்ட் எடுக்கும் முனைப்பில் இரு அணியினர் 
செய்திகள்

புரோ கபடி - டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது குஜராத் அணி.

மாலை மலர்

மும்பை:

புரோ கபடி போட்டி 7வது சீசனின் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் மும்பையில் நேற்று இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–தபாங் டெல்லி அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் தபாங் டெல்லி அணி 14–11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் குஜராத் அணி அபாரமாக ஆடி முன்னிலை பெற்றதுடன், அதை கடைசி வரை தக்க வைத்துக்கொண்டது.

இறுதியில், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 31–26 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்றது.