தானே:
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக இந்திய குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறுகையில், ‘குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை பெறும்’ என்றார்.