சித்தரிப்பு படம் 
செய்திகள்

3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை

குஜராத் மாநிலத்தில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமுகனுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஐகோர்ட் இன்று உறுதிப்படுத்தியது.

மாலை மலர்

குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக அனில் யாதவ் என்ற காமுகனை போலீசார் கைது செய்தனர்.

சூரத் நகரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்கீழ் அவனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஜூலை மாதத்தில் விசாரணை முடிவடைந்து, அனில் யாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.