குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தயாதரா கிராமத்தில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதியதில் கார் தூக்கி எறியப்பட்டது.
காரில் இருந்த டிரைவர் மற்றும் 11 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் 5 மாணவர்கள் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வே அதிகாரிகளும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.