செய்திகள்

கிண்டி அருகே பஸ் மோதி முதியவர் பலி

கிண்டி அருகே பஸ் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போரூர்:

சென்னை அசோக் நகர் முதல் அவின்யூவில் உள்ள வெளியூர் பஸ் நிறுத்தம் நோக்கி இன்று அதிகாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே கிண்டி நோக்கி வேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் பெரியபாளையம் மேட்டு தெருவைச் சேர்ந்த பாபுவை கைது செய்தனர். விபத்தில் இறந்தவர் புருஷோத்தமன் என்பது தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT