செய்திகள்

மும்பை தீ விபத்து: ராகுல் காந்தி டுவிட்டரில் மராத்தி மொழியில் இரங்கல்

மும்பை தீ விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் மராத்தி மொழியில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மும்பை தீ விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் மராத்தி மொழியில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள கமலா மில் வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர். 19 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், மும்பை தீவிபத்துக்கு காரணமானவர்கள் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என மராத்தி மொழியில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மும்பை ஏற்பட்ட தீ விபத்து எதிர்பாராதது. தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், இந்த தீவிபத்துக்கு காரணமானவர்கள் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.