பஸ் விபத்து 
செய்திகள்

கவுதமாலாவில் சோகம் - பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் பலி

கவுதமாலா நாட்டில் பயணிகள் பஸ் ஒன்று விபத்தில் சிக்கியதில் 20 பேர் பரிதாபமாக பலியானது அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கவுதமாலா சிட்டி:

கவுதமாலா நாட்டில் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் கவுலான் நகராட்சி பகுதியில் சென்றபோது, பஸ்சின் பின்புறம் லாரி ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில் 18 வயதுக்கு உட்பட்ட 9 பேரும் அடங்குவர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.