கோப்புபடம் 
செய்திகள்

சூலூர் அருகே இரும்பு பொருட்கள் திருடிய காவலாளி கைது

சூலூர் நீலாம்பூர் பகுதியில் தனியார் இரும்பு தொழிற்சலையில் இரும்பு பொருட்களை திருடிய காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

சூலூர்:

சூலூர் நீலாம்பூர் பகுதியில் தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு இருகூர் புதுகாலனியை சேர்ந்த சுப்பிரமணியன் (43) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் ஏதோ ஒரு இரும்பு பொருட்கள் இருப்பதாக சக ஊழியர் ஒருவர் நிர்வாகத்திடம் தெரிவித்தார். 

உடனே அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், சுப்பிரமணியத்தை பின்தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.