செய்திகள்

ஜி.எஸ்.டி-க்கு எதிர்ப்பு - கான்பூரில் வியாபாரிகள் ரெயில் மறியல் போராட்டம்

நாடுமுழுவதும் அமல்படுத்தவுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூர் நகரில் வியாபாரிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்னோ:

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி அறிமுக விழாவிற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டத் தொடருக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர், காஸியாபாத் உள்ளிட்ட நகரங்களிலும், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரிலும் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கான்பூர் நகரில் வியாபாரிகள் ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வியாபரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காஸியாபாத் நகரில் வியாபாரிகள் சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சூரத் நகரில் ஜவுளித் துறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.எஸ்.டி.யை எதிர்த்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.