புதுடெல்லி:
நாளை மறுநாள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் வருவாயை அதிகரிக்க செய்யும் வகையில் சில பொருட்களின் வரி விதிப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோன்று செருப்பு, ஜவுளி, உரம் தொடர்பான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது. ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்புகளும் நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.