மோகன்ராஜ் தனது சித்தப்பா முருகன், சித்தி மகேஸ்வரி மற்றும் தம்பி, தங்கையுடன் எடுத்த படம். 
செய்திகள்

தாயின் உடலை தகனம் செய்ய ஆஸ்பத்திரியில் கையேந்திய சிறுவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் நல்ல உள்ளங்கள்

தாயின் உடலை தகனம் செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரியில் பலரிடம் கையேந்திய சிறுவர்களுக்கு பலர் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

மாலை மலர்

எரியோடு:

எரியோடு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் மோகன்ராஜ், வேல்முருகன் ஆகியோர் தனது தாயாரின் உடலை தகனம் செய்வதற்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தரியில் உள்ள நோயாளிகளிடம் கையேந்தி பணம் பெற்றனர். அவர்களுக்கு ஏராளமானோர் மனமுவந்து உதவி செய்தனர். அதன் பின்னர் திண்டுக்கல் மின் மயானத்தில் தனது தாயின் உடலை தகனம் செய்தனர்.

இந்த செய்தி மாலைமலரில் பிரசுரமானது. இந்த உருக்கமான தகவல் அறிந்ததும் ஏராளமானோர் உதவி செய்த வண்ணம் உள்ளனர். தற்போதும் போனில் தொடர்பு கொண்டு சிறுவனின் செல்போன் எண்களை கேட்ட வண்ணம் உள்ளனர்.

இது குறித்து சிறுவன் மோகன்ராஜ் கூறுகையில் ‘மாலைமலரில் செய்தி வெளியான நிமிடமே என்னிடம் பலர் செல்போனில் தொடர்பு கொண்டனர். இதற்காக மாலைமலருக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். நானும் எனது தம்பி, தங்கையும் படிக்க விரும்புகிறோம். எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் 8098947144 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ என்றான். #Tamilnews