கையெறி குண்டு தாக்குதல் நடந்த இடம் 
செய்திகள்

மணிப்பூர் சட்டசபை வளாகம் அருகே கையெறி குண்டு வீச்சு - சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் காயம்

மணிப்பூர் மாநில சட்டசபை வளாகம் அருகே அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இம்பால்:

மணிப்பூர் மாநில சட்டசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டசபை வளாகத்தில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT