ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே உள்ள தாம்ஹல் ஹான்சி போரா காவல் நிலைய வளாகத்தில் இன்று மாலை தீவிரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் வெடித்ததில் 2 காவலர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.