செய்திகள்

மான்செஸ்டர் சிட்டி வீரர் ஸ்டெர்லிங் மீது இனவெறி தாக்குதலா?: போலீசார் விசாரணை

இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஹீம் ஸ்டெர்லிங் புகார் அளித்ததால், கிரேட்டர் மான்செஸ்டர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கடந்த சனிக்கிழமை இவர் மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சி மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஸ்டெர்லிங்கை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் காலில் பலமுறை எட்டி உதைத்துள்ளார்.

இதுகுறித்து ரஹீம் ஸ்டெர்லிங் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தன் மீது இனவெறியை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியதாகத் தெரிகிறது. இந்த புகார் அடிப்படையில் கிரேட்டர் மென்செஸ்டர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.