செய்திகள்

எஸ்.வி.சேகரை உடனே கைது செய்ய வேண்டு- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு கருத்தை வெளியிட்ட எஸ்.வி.சேகரை உடனே கைது செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். #gramakrishnan #svshekher

கோவில்பட்டி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

குட்கா ஆலை விவகாரத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கையூட்டு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அது உண்மை எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் ராஜினமா செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை கைது செய்யப்படவில்லை.

எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்கல்வி துறை சீரழிந்து உள்ளது. பேராசிரியர் நியமனத்தில் ஊழல் நடக்கிறது. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுனர் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது தவறு. இந்த வி‌ஷயத்தில் முறையாக விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews  #gramakrishnan #svshekher

SCROLL FOR NEXT