மாயம் 
செய்திகள்

திருமணம் நிச்சயம் நடைபெற இருந்த நிலையில் பட்டதாரி பெண் மாயம்

முத்தியால்பேட்டையில் திருமணம் நிச்சயம் நடைபெற இருந்த நிலையில் பட்டதாரி பெண் மாயமானார்.

மாலை மலர்

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை சாமி முதலியார் வீதியை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவரது மனைவி அருள் மணி. இவர்களது மகள் ஜெயதேவி. (வயது 24). எம்.காம். பட்டதாரி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பண்ணசாமி. இறந்து விட்ட நிலையில் அருள்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இதற்கிடையே ஜெயதேவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயம் செய்யப்பட இருந்தது.

இந்த நிலையில் திருமணம் நிச்சயம் நடைபெற இருப்பதற்கு முதல் நாள் ஜெயதேவி தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால், அதன் பிறகு ஜெயதேவி வீடு திரும்பவில்லை. தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் ஜெயதேவி இல்லை.

பின்னர் விசாரித்த போது சம்பவத்தன்று ஜெயதேவி புதுவை காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு வாலிபருடன் பேசிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அருள்மணி பெரியகடை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் ஜெயதேவியை ஜெயக்குமார் என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.