ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேந்தமங்கலம் பிரிவு ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவரது மூத்த மகன் சந்தோஷ்குமார் (வயது 33). பி.எஸ்.சி பட்டதாரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இன்று காலை அவர் அந்தப்பகுதியில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் சென்று பிணத்தை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராசிபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மலர்விழி பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.