செய்திகள்

கரிக்கலாம்பாக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து மரணம்

கரிக்கலாம்பாக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

மாலை மலர்

புதுச்சேரி:

கரிக்கலாம்பாக்கம் சுபாஷ் நகரை சேர்ந்தவர் முருகையன் (வயது47). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக குளித்துவிட்டு முருகையன் தயாராகி கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக முருகையனை அவரது குடும்பத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகையன் பரிதாபமாக இறந்து போனார். திடீர் மாரடைப்பு காரணமாக முருகையன் இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.