செய்திகள்

அன்னிய முதலீட்டு கொள்கை மேலும் தளர்வு: ஏர் இந்தியாவில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல்

அன்னிய முதலீட்டு கொள்கையை இன்று மேலும் தளர்த்தியுள்ள மத்திய மந்திரிசபை, கட்டுமான தொழிலில் 100 சதவீதம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கும் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #FDI #AirIndia

மாலை மலர்

புதுடெல்லி:

அன்னிய முதலீட்டு கொள்கையை இன்று மேலும் தளர்த்தியுள்ள மத்திய மந்திரிசபை, கட்டுமான தொழிலில் 100 சதவீதம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் 49 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கும் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஒற்றை பிராண்ட் (வணிக முத்திரை) சில்லரை வர்த்தகத்தில் அரசின் அனுமதிக்கு காத்திருக்காமல் 100 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் இனி முதலீடு செய்யலாம்.

மேலும், வெளிநாட்டு விமானச்சேவை நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்யவும் சில வழித்தடங்களில் விமானச்சேவைகளை நடத்தவும் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #FDI #TamilNews