விவசாயத் துறை 
செய்திகள்

விவசாயத் துறையை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள் - நிர்மலா சீதாராமன்

பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு 16 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியா தற்போது பொருளாதாரத்தில் உலகின் 5-வது பெரிய நாடாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கடன் 2014-ல் 52.4 சதவீதமாக இருந்த கடன் தற்போது 48.7 சதவீதமாக குறைந்துள்ளது. 

விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு 16 அம்ச திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விவசாய விளைபொருள்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்காக தான்யலட்சுமி திட்டம் தொடங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கட்ன்கள் 16 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். பால், பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்ல தனி ரெயில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.