செய்திகள்

இந்தியா-பாக். எல்லையில் கண்ணுக்கு புலப்படாத வேலி அமைத்து கண்காணிக்க முடிவு: மக்களவையில் கிரண் ரிஜிஜு தகவல்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கண்ணுக்குப் புலப்படாத வேலி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

பாராளுமன்றத்தின் மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு பேசுகையில், “இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கண்ணுக்கு புலப்படாத வகையில் வேலி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பை
தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  

சென்சார், ரேடார் மற்றும் பகலிலும் இரவிலும் பதிவு செய்யக்கூடிய கேமராக்கள் உள்பட பல வகைகளில் கண்ணுக்கு புலப்படாத வேலி அமைக்கும் வகையில் திட்டம் தயாராகி வருகிறது.