கைது 
செய்திகள்

ஒரத்தநாடு அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய ரவுடி கைது

ஒரத்தநாடு அருகே அரசு பஸ்சை வழிமறித்த போது நிற்காததால் டிரைவரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாகோட்டையை சேர்ந்தவர் அழகேசன் (வயது 35). அரசு பஸ் டிரைவர்.

சம்பவத்தன்று இவர் ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது திடீரென ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த கட்டைராஜா (40) என்பவர் பஸ்சை வழிமறித்து நிறுத்தினார். டிரைவர் அழகேசனிடம் எங்கள் ஊரை சேர்ந்தவர் ஒருவர் வழிமறித்தபோது பஸ்சை ஏன் நிறுத்தவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கட்டை ராஜா ஆத்திரம் அடைந்து அழகேசனை தாக்கினார்.

இது குறித்து அழகேசன் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டைராஜாவை கைது செய்து விசாரித்ததில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.