செய்திகள்

ராஜ்நாத் சிங்குடன் மீண்டும் ஆலோசனை: கவர்னர் இன்று சென்னை வருகை

தமிழக அரசியலில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குடன் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மாலை மலர்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்.

தற்போதுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பின்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை அவர் மீண்டும் டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக அரசியலில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவருடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை புறப்பட்டார். இன்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை வருகிறார். கவர்னர் மாளிகையில் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.


மாலையில் கவர்னர் வித்யாசாகர்ராவை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.