கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரக்கன்றை நட்ட காட்சி 
செய்திகள்

அவினாசி அருகே மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர்

அவினாசி அருகே மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திருப்பூர், அவினாசி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

கோவை:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தொரவலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டு இயக்கம், கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் ஒரு முகம், ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் மியாவாசி என்ற தொழில்நுட்பத்துடன் 25 சென்ட் இடத்தில் 2,500 மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திருப்பூர், அவினாசி, பெருமாநல்லூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.