நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அனுமதிக்க மறுத்ததை அடுத்து அவர்கள் சட்டசபை வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கவர்னர் இணைய தளம் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு பெஞ்சு அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தபோது, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தலைமை செயலாளரிடம் விரிவான அறிக்கையையையும், அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களையும் கேட்டு இருக்கிறேன்.
அது வந்ததும் மத்திய அரசுக்கும், மத்திய உள்துறைக்கும் தகவல் அனுப்பப்படும்.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். #tamilnews