செய்திகள்

2016-17-ம் ஆண்டு புதுவை அரசு திட்ட மதிப்பீடு ரூ.6,500 கோடி: கவர்னர் கிரண்பேடி தகவல்

புதுவைக்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ.6,500 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக புதுவை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண் பேடி கூறினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை தலைமை செயலகத்தில் நடந்த திட்டக்குழு கூட்டத்துக்கு பின்னர் கவர்னர் கிரண் பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. புதுவைக்கு நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது.

புதுவையின் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களின் கூட்டு பொறுப்பும் உள்ளது. அரசு அதிகாரிகள் தங்களது உச்சகட்ட பங்களிப்பை வழங்க வேண்டும்.

புதுவைக்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ.6,500 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் மாநில அரசு கடன் வாங்க கூடாது. மேலும் மாநில அரசின் உள்வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக புதுவை அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.