செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் கூட்டுறவு சங்க தேர்தல் - கவர்னர் கிரண்பேடி அறிவிப்பு

புதுவையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தலை 3 கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறினார். #governorkiranbedi

மாலை மலர்

புதுவையில் உள்ள கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 3 கட்டங்களாக இந்த தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

வருகிற ஜூலை மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடும் பட்சத்தில் கடை மடை பகுதியான காரைக்காலுக்கும் நீர் வரும் என நம்புகிறேன். காவிரி நீர் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். #governorkiranbedi