செய்திகள்

யுகாதி திருநாள்- கவர்னர் வாழ்த்து

யுகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Ugadi

மாலை மலர்

சென்னை:

தமிழக கவர்னர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

யுகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

யுகாதி பண்டிகையை மகிழ்ச்சிகரமாக, பாரம்பரியமாக கொண்டாடும் வேளையில், நாம் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும், நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் நம் நாட்டின் அமைதிக்காகவும், வலிமைக்காகவும், ஒளிமயமான வளர்ச்சிக்காகவும் உதவ வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews