செய்திகள்

சென்னை போர் நினைவுச் சின்னத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மரியாதை

குடியரசு தினத்தை ஒட்டி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

சென்னை:

நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்னும் சற்று நேரத்தில் கொடியேற்ற இருக்கிறார். அதற்கு முன்னதாக, மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து, கவர்னர் விழா நடக்கும் இடத்திற்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடியரசு தின விழா மற்றும் கண்காட்சி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

SCROLL FOR NEXT