செய்திகள்

ஞாநி மறைவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

எழுத்தாளர் ஞாநி மறைவு சமுதாயத்துக்கு குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு பேரிழப்பாகும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை:

எழுத்தாளர் ஞாநி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகரான ஞாநி சங்கரன் மரணம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் எதையும் சாராதவராகவும், அச்சமற்ற பத்திரிகையாளராகவும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவராகவும் தனது கொள்கை கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் நெறி பிறழாதவராகவும் திகழ்ந்தார். ஜனநாயக கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவராகவும், சுதந்திர கொள்கைகளை பரப்புவதில் சிறந்தவராகவும் விளங்கினார்.

அவரது மரணம் சமுதாயத்துக்கு குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

SCROLL FOR NEXT