செய்திகள்

ஜெயேந்திரர் மரணம் - கவர்னர் பன்வாரிலால் இரங்கல்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவுக்கு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மாலை மலர்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவுக்கு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் மரணம் அடைந்ததை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நேற்று அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றேன்.

அவரது காலத்தில் பல பள்ளிகள், கண் ஆஸ்பத்திரிகள், குழந்தை அறக்கட்டளை ஆஸ்பத்திரி, இந்து மி‌ஷன் ஆஸ்பத்திரியை தொடங்கினார். மற்றும் தமிழ்நாடு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பொதுநல நிறுவனங்களை சமுதாயத்திற்காக நிறுவினார்.

அவரது மறைவு சமுதாயத்துக்கு குறிப்பாக அவரது ஆதரவாளர்களுக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரது ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews