செய்திகள்

இறக்குமதி செல்போன் உதிரிபாகங்களுக்கு 10 சதவீத சுங்க வரி

சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி) நடைமுறைக்கு வந்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

சரக்கு சேவை வரி(ஜி.எஸ்.டி) நடைமுறைக்கு வந்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரிபாகங்களுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சார்ஜர், பேட்டரி, வயர்ஹெட் செட், மைக்ரோபோன், ரிசீவர், கீ பேட், யு.எஸ்.பி. கேபிள் ஆகிய குறிப்பிட்ட உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது அவற்றுக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்த உதிரிபாகங்களை தயாரிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இவ்வரி விதிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது.