ஆர்.கே.எஸ்.பதாரியா 
செய்திகள்

இந்திய விமானப்படை புதிய தளபதியாக பதாரியா நியமனம்

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதை தொடர்ந்து புதிய தளபதியை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.