சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி 
செய்திகள்

ஏர் இந்தியா விரைவில் தனியார் மயம் - மத்திய அரசு திட்டவட்டம்

ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ந‌‌ஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி ந‌‌ஷ்டத்தை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அத்துடன், ‘‘யார் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கினாலும், அவர்கள் அதிர்‌‌ஷ்டசாலிகள். வலுவான தனியார் துறை கொள்கைகளின்படி ஏர் இந்தியாவை நடத்த முடியும்’’ என்று குறிப்பிட்டார்.