செய்திகள்

அட்டார்னி ஜெனரல் பதவி காலம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலான முகுல் ரோத்தகியின் பதவிகாலத்தை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலாக முகுல் ரோத்தகி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவருடைய 3 ஆண்டு பதவி காலம் நிறைவுபெறுவதை தொடர்ந்து மத்திய அரசு நேற்று அவரது பதவிகாலத்தை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இதேபோல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் பதவி காலமும் நீட்டிக்கப்பட்டது. மத்திய மந்திரி சபையின் பதவி நியமன குழு இந்த முடிவை எடுத்தது.

SCROLL FOR NEXT