திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள முன்னிலை கோட்டையைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 52). இவர் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
பேகம்பூர் அருகே சென்ற போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அய்யாத்துரை எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். உடனடியாக அவரை திண்டுக்கல் - பழனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். சரியான சிகிச்சை அளிக்காததால்தான் இறந்ததாக உறவினர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அய்யாத்துரை குடிபோதையில் இருந்ததும் அதன் காரணமாகவே தலையில் அடிபட்டு உயிரிழந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் பின் அவரது உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews