செய்திகள்

துடியலூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

துடியலூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கவுண்டம்பாளையம்:

கோவை பேரூர் தீத்தி பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (32). இவர் துடியலூர் செங்காளி பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பாலசுப்பிரமணி வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பினார். அப்போது எதிரே கோவையில் இருந்து கோவில்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் பாலசுப்பிரமணி வந்த மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ராமமூர்த்தியை (28) கைது செய்தனர்.

SCROLL FOR NEXT