செய்திகள்

மகாராஷ்டிராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டது: ஒரே நாளில் மூன்று சம்பவங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டது. இதனுடன் இன்று ஒரே நாளில் இந்தியாவில் மூன்று இடங்களில் ரெயில்கள் தடம் புரண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று ஒரே நாளில் இந்தியா மற்ற இரண்டு இடங்களிலும் ரெயில் தடம் புரண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. டெல்லியிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி வரை செல்லும் ராஞ்சி ராஜ்தானி விரைவு ரெயில் இன்று மதியம் டெல்லியின் சிவாஜி பாலத்திற்கு அருகில் செல்லும்போது விபத்துக்குள்ளானது. ரெயிலின் எஞ்சின் மற்றும் பவர் கார் ஆகிய இரண்டு பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.

மற்றொரு சம்பவத்தில் ஜபால்புர் - சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரெயில் உ.பி. சோன்பாத்ரா மாவட்டத்தில் உள்ள ஒப்ரா டேம் நிலையம் அருகில் வரும்போது விபத்துக்குள்ளானது. இதில் 7 பேட்டிகள் தடம் புரண்டன. இச்சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

SCROLL FOR NEXT