பைசல் ஃபரீத், ராபின்ஸ் 
செய்திகள்

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: துபாயில் இருவர் கைது- என்.ஐ.ஏ.

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் துபாயில் பைசல் ஃபரீத் மற்றும் ராபின்ஸ் கைது செய்யப்பட்டுள்ளனர் என தேசிய விசாரணை முகமை கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தூதரகம் பெயரை பயன்படுத்தி கேரளாவிற்கு தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ள 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணம் சமூக விரோத செயலுக்கு ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் தேசிய விசாரணை முகமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் துபாயில் இருக்கும் பைசல் ஃபரீத் மற்றும் ராபின்ஸ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. என்.ஐ.ஏ. துபாய் சென்று விசாரணை நடத்தியது.

இதுகுறித்த வழக்கு கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பைசல் ஃபரீத் மற்றும் ராபின்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 6 நபர்களுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆறு நபர்களும் இரு நாட்டின் வெளியுறவுத்துறை உறவை சீரழிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.