செய்திகள்

தண்டையார்பேட்டை நகைக்கடையில் 1 கிலோ தங்கம் மாயம்

தண்டையார்பேட்டை நகைக்கடையில் 1 கிலோ தங்கம் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்லால் (50). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையை அவரது உறவினர் ஒருவர் கடந்த 7 ஆண்டுகளாக கவனித்து வந்தார். இந்த நிலையில் கடையில் இருந்து நகைகள் சிறிது சிறிதாக மாயமாகி வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ராம்லால் சமீபத்தில் நகை இருப்பை ஆய்வு செய்தார். அதில் கடையில் இருந்து 1 கிலோ தங்க நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

அதை தொடர்ந்து ஆர்.கே.நகர் போலீசில் ராம்லால் புகார் செய்தார். அதில், கடையில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகள் மாயாகிவிட்டது. கடையை பொறுப்பாளராக இருந்து கவனித்த உறவினர் மீது சந்தேகமாக உள்ளதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT