செய்திகள்

துபாயில் இருந்து கோவை வந்த விமானத்தில் தங்க கட்டிகள் கடத்திய வாலிபர் கைது

துபாயில் இருந்து கோவை வந்த விமானத்தில் ஆசனவாயில் மறைத்து தங்க கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தது.

அதில் இருந்த பயணிகள் இறங்கி வெளியே சென்றனர். அப்போது ஒரு வாலிபர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுங்க இலாகா உதவி கமி‌ஷனர் ராய் ஜோசப், சூப்பிரண்டுகள் உமா சிவதாஸ், ராஜ் குமார் ஆகியோர் அந்த வாலிபரை தனியாக அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அப்போது அந்த வாலிபர் தனது ஆசன வாயில் 583.200 கிராம் எடையுள்ள 5 தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 17.93 லட்சம் ஆகும்.


அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது ஹாலிக் (29) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி வேலை தேடி துபாய் சென்றுள்ளார். அங்கு வேலை கிடைக்கவில்லை.

SCROLL FOR NEXT