கோ-ஏர் விமானம் 
செய்திகள்

மருத்துவ அவசரநிலை: ரியாத்-டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

ரியாத்தில் இருந்து டெல்லி வந்த கோ-ஏர் விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

ரியாத்தில் இருந்து டெல்லி வந்த கோ-ஏர் விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது (பயணி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது). 

விமானம் கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அந்தப் பயணி இறந்ததாக அறிவித்தனர். பயணி குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT