செய்திகள்

கோஏர் விமானத்தில் பறவை மோதியது: சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது

டெல்லியில் இருந்து பாட்னா சென்ற கோஏர் விமானத்தில் பறவை மோதியதால் விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

மாலை மலர்

மும்பை:

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் கோஏர் நிறுவனத்தின் விமானம் பாட்னாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் 174 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டு மேலே எழும்பிய சிறிது நேரத்தில், இறக்கையில் ஒரு பறவை மோதியது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை ஆய்வு செய்ய பைலட் முடிவு செய்தார். இதனால் மீண்டும் டெல்லிக்கே  விமானத்தை திருப்பிய பைலட், அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமானம் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டு, வேறு விமானம் மூலம் பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தரையிறக்கப்பட்ட விமானத்தில் பறவை மோதியதால் ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்கிறதா? என்று பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.