பனாஜி:
கோவா மாநிலத்தின் பனாஜி, வால்போய் சட்டமன்ற தொகுதிகளுக்கும், டெல்லியின் பவானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நந்தியாலா தொகுதிகளுக்கும் கடந்த ஆகஸ்ட் 23-தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இடைத் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பனாஜி தொகுதியிக் தொடக்கம் முதலே கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் முன்னிலை வகித்து வந்தார்.
நந்தியாலா தொகுதியில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று வந்தார். இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் மனோகர் பாரிக்கர் 2832 வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார். டெல்லியின் பவானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர் குமார் 6-ம் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 3437 வாக்குகள் முன்னிலை பெற்றார்.
இறுதியாக, பனாஜி தொகுதியில் முதல்வர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 4803 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிரீஷ் சோதங்கரை தோற்கடித்தார். இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தனது முதல்வர் பதவியை அவர் தக்க வைத்துக் கொண்டார்.
வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் பாரிக்கர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அடுத்த வாரத்தில் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.