சுவாமிமலை:
கும்பகோணம் அரசலாறு வழிநடப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி மோகனம்பாள்(65). சாராய வியாபாரி. இவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது.
இந்த நிலையில் மோகனம்பாள் தனது வீட்டில் சாராயம் பதுக்கி விற்பதாக கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் மற்றும் போலீசார் மோகனம்பாள் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் 15 லிட்டர் எரி சாராயம் இருந்தது.
அதனை பறிமுதல் செய்து மோகனம்பாள், அவரது தம்பி கலியமூர்த்தி, கலியமூர்த்தி மகன் விமல், நொண்டி சரவணன், படையப்பா ஆகியோரை கைது செய்தனர்.