ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது சைல்டு லைன் அலுவலர்களிடம் அந்த சிறுமி தனக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உதவியுடன் அந்த சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அந்த சிறுமியின் தந்தையை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.