ரப்பி நிஸ்கா 
செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வடமாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஊத்துக்குளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காங்கேயம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ரப்பி நிஸ்கா (வயது 28). இவர் ஊத்துக்குளி அருகே உள்ள தனியார் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 9 வயது சிறுமிக்கு ரப்பி நிஸ்கா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இந்த விவரத்தை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரப்பி நிஸ்காவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT