செய்திகள்

திருபுவனை அருகே சிறுமியிடம் சில்மி‌ஷம்: வாலிபர் கைது

திருபுவனை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

திருபுவனை அருகே திருவாண்டார் கோவில் சின்னபேட் பகுதியில் 8 வயது சிறுமி நேற்று இரவு 8 மணியளவில் மழையில் குடை பிடித்தபடி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்தாள்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 33) என்ற வாலிபர் நைசாக பேசி சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி அந்த சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தாள்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்குபதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.