முத்துப்பேட்டை:
திருவாரூர் அருகே கோமல் பகுதியை சேர்ந்தவர் சித்ராதேவி(35). தனது கணவர் நேரு மற்றும் தனது கைக்குழந்தையுடன் நேற்று முத்துப்பேட்டை அருகே எடையூருக்கு செல்ல திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அப்போது தனது கைப்பையை பஸ்ஸிலேயே மறந்து வைத்து விட்டு எடையூரில் இறங்கிவிட்டார். அதில் 4 பவுன் நகை, 3500 ரொக்கம், செல்போன் ஆகியன இருந்தது.
இது குறித்து எடையூர் போலீசில் அவர் புகார் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன், தலைமை காவலர்கள் பிரகாஷ், பாஸ்கர் ஆகியோர் அதனை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டைக்கு சென்று இருந்த முத்துப்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் வீரசேகரனிடமும்இது குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர் பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி அருகே வந்த பஸ்ஸை நிறுத்தி கைப்பையை மீட்டார். பின்னர் அதனை அவர் எடையூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். நகை, பணத்தை சித்ராதேவியிடம் போலீசார் கொடுத்து, அதனை மீட்க உதவிய வீரசேகரனுக்கு பாராட்டு தெரிவித்தனர். #tamilnews